/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் 400 பேருக்கு மருத்துவ பரிசோதனை
/
திருத்தணியில் 400 பேருக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : டிச 08, 2024 02:40 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நிரந்திர பணியாளர்கள் மற்றும் முக்கிய துாய்மை பணியாளர்களுக்கான முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார்.
வட்டார சுகாதார ஆய்வாளர் முரளி வரவேற்றார். இதில், திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி, ஆணையர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து மருத்துவ அலுவலர் பழனி தலைமையில், 15க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள், அலுவலக ஊழியர்களுக்கு, ரத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதே அலுவலகத்தில் பீகாக் மருத்துவமனை சார்பிலும், நேற்று, சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், நகராட்சி பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டன.
மேலும், மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மொத்ததில் நகராட்சியில், நேற்று, 400 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், செவிலியர்கள், இல்லம் தேடி மருத்துவ ஊழியர்கள் பங்கேற்றனர்.