/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரத்தில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சாலையோரத்தில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலையோரத்தில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலையோரத்தில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : பிப் 17, 2025 11:17 PM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து, அனுப்பம்பட்டு, தேவதானம், வேலுார் வழியாக திருவெள்ளவாயல் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின்போது, மேட்டுப்பாளையம், இலவம்பேடு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேட்டுப்பாளையம் பகுதியில் மேற்கண்ட சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலம், மண், குப்பையால் துார்ந்து கிடந்தது.
இதனால் மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து, சிறுபாலத்தின் இருபுறமும் இருந்த அடைப்புகளை அகற்றி, மழைநீர் வெளியேற்றப்பட்டது.
இதற்காக சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டன. நான்கு மாதங்கள் ஆன நிலையில், இதுவரை பள்ளங்களை மூடி, சாலை சீரமைக்கப்படாமல், அதே நிலையில் இருக்கிறது.
இருபுறமும் பள்ளங்கள் வெட்டப்பட்டதால், சாலை குறுகலாக மாறிவிட்டது. எதிர் எதிரே வாகனங்கள் அப்பகுதியை கடக்கும்போது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
இரவு நேரங்களில் சாலையோரத்தில் இருக்கும் பள்ளம் தெரியாத நிலையில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கும், தடுமாற்றத்திற்கும் ஆளாகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால், மேற்கண்ட பகுதியில், சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

