/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம்
/
ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம்
ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம்
ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம்
ADDED : பிப் 13, 2025 09:51 PM
திருவள்ளூர்:எடை குறைவான 797 குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் சார்பாக எடை குறைவான குழந்தைகளுக்கு தினமும் 200 மி.லிட்டர் பால் மற்றும் முட்டை 150 நாட்களுக்கு தொடர்ச்சியாக வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
பூண்டி வட்டாரத்தில் உள்ள 797 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஊட்டச்சத்தை மேம்படுத்தும் விதமாக இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் வாயிலாக முட்டை வழங்கப்படும்.
மீதமுள்ள நாட்களுக்கு வளமிகு வட்டார சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் மூலமாக 200 மி.லிட்டர் பால் ஆவின் நிறுவனத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.