/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 21, 2025 11:40 PM

திருவள்ளூர், ஏப். 22-
திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், பாண்டூர் ஊராட்சி, கனகவல்லிபுரம் கிராமத்தில் இருந்து, இடதுபுறம் 2 கி.மீ., துாரத்தில் விடையூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில், 1,200க்கும் மேற்பட்ட வீடுகளில், 2,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
விடையூர் வாசிகள், மருத்துவம், உயர்கல்வி, அத்தியாவசிய தேவை உள்ளிட்டவைகளுக்காக, தங்கள் கிராமத்தில் இருந்து கனகவல்லிபுரம் வழியாக, திருவள்ளூருக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், விடையூர் வாசிகள் பெரும்பாலானோர், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த ஆடு, மாடு வளர்த்து வருகின்றனர். இதற்காக கிராமவாசிகள், விடையூர் - கனகவல்லிபுரம் சாலையில் இரண்டு மற்றும் நான்கு சாக்கர வாகனத்திலும், நடந்தும் சென்று வருகின்றனர்.
கால்நடைகளை அழைத்துக் கொண்டு, சாலையோரம் வளர்ந்துள்ள மேய்க்கால் நிலத்திற்கு சென்று வருகின்றனர். இச்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பிகள், சில இடங்களில் தாழ்வாக செல்கிறது.
மேலும், சாலையை ஒட்டி செல்லும் மின்கம்பிகளில் கனரக வாகனங்கள் உரசினாலும், பலத்த காற்றடித்தாலும், மின்கம்பி அறுந்து விழும் அபாயநிலை உள்ளது.
எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.