/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் குவிந்துள்ள கழிவுகளால் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
/
சாலையில் குவிந்துள்ள கழிவுகளால் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
சாலையில் குவிந்துள்ள கழிவுகளால் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
சாலையில் குவிந்துள்ள கழிவுகளால் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
ADDED : நவ 03, 2025 01:01 AM

பொன்னேரி: மழைநீர் கால்வாய் பணிக்காக தோண்டி எடுக்கப்பட்ட கழிவுகள், சாலையில் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட, புதிய தேரடி சாலையில், மழைநீர் கால்வாய் முழுதும் கழிவுகள் அடைத்து துார்ந்து போனது. மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுவதையடுத்து அங்கு புதிய கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது.
இப்பணிகளுக்காக, அங்குள்ள துார்ந்துபோன கால்வாய் மற்றும் அதிலுள்ள கழிவுகள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அள்ளி, சாலையில் கொட்டி குவிக்கப்பட்டு வருகிறது.
இதில் அதிகளவில் சாக்கடை கழிவுகள் உள்ளன. இவை மழைநீரில் கரைந்து சாலை முழுதும் பரவுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.
மேலும், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதால் அங்குள்ள வியாபாரிகளும், மக்களும் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
சாலையும் குறுகி இருப்பதால், போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது. எனவே கால்வாய் பணிகளுக்காக தோண்டப்படும் கழிவுகளை உடனுக்குடன் அங்கிருந்து அகற்றவும், சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

