/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடி சாலையில் தோண்டிய பள்ளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
ஆவடி சாலையில் தோண்டிய பள்ளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ஆவடி சாலையில் தோண்டிய பள்ளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ஆவடி சாலையில் தோண்டிய பள்ளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 29, 2025 12:34 AM

திருவள்ளூர்:பாதாள சாக்கடை அடைப்பினை சீர்படுத்த தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர், ஜே.என்.சாலை, தீயணைப்பு நிலையத்தின் எதிர்புறம் ஆவடி 'பைபாஸ்' சாலை பிரிகிறது. திருவள்ளூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் வழியாக வரும் வாகனங்கள், திருநின்றவூர், ஆவடி செல்வதற்காக இச்சாலையை பயன்படுத்தி வருகின்றன.
இந்த 'பைபாஸ்' சாலையில் 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், வீடுகள் அமைந்துள்ளன. மேலும், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, பூங்கா நகர் செல்லும் வாகனங்களும் இந்த சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றன.
இச்சாலை எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. இந்த நிலையில், காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் வழியாக, காக்களூர் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் - காக்களூர் 'பைபாஸ்' சாலையில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கழிவுநீர் அடைப்பினை சீர்படுத்த, சில நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. இருப்பினும், தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை மூடப்படவில்லை.
இதனால், இச்சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள், தடுமாறி பள்ளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், தோண்டப்பட்ட பள்ளத்தினை மூடி, சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.