/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 27, 2025 01:06 AM

ஊத்துக்கோட்டை: சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை பஜார், பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம், சீத்தஞ்சேரி, ஒதப்பை, பூண்டி உள்ளிட்ட தேசிய - மாநில நெடுஞ்சாலைகளில் மாடுகள் கூட்டமாகவும், ஆங்காங்கே சாலையில் அமர்ந்தும் ஓய்வெடுக்கின்றன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாடுகள் சாலையில் இயற்கை உபாதைகளை கழிப்பதால், அதை மிதித்து பாதசாரிகள், வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.