/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விரிவடைந்து வரும் கால்வாய் பள்ளம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
விரிவடைந்து வரும் கால்வாய் பள்ளம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
விரிவடைந்து வரும் கால்வாய் பள்ளம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
விரிவடைந்து வரும் கால்வாய் பள்ளம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மே 19, 2025 11:59 PM

கும்மிடிப்பூண்டி, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், சிப்காட் ஏ.ஆர்.எஸ்., சந்திப்பு உள்ளது. அப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கும், சிப்காட் சாலைக்கும் இடையே மழைநீர் கால்வாய் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிப்காட் வரும் வாகனங்கள், அந்த கால்வாயை கடந்து செல்ல வேண்டும். இந்த வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றன.
இரு மாதங்களுக்கு முன், சாலையின் நடுவே உள்ள கால்வாயில் சிறிய உடைப்பு ஏற்பட்டது. தற்போது, அந்த உடைப்பு மேலும் விரிவடைந்து பெரிய அளவிலான பள்ளமாக மாறியுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் கடந்து செல்கின்றனர். இரவு நேரத்தில், அந்த பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், சேதமடைந்த கால்வாய் உடைப்பை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.