/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சூளைமேனியில் சாலை தடுப்பு சேதம் தொடர் விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

ADDED : ஜூலை 31, 2025 01:13 AM

ஊத்துக்கோட்டை,:தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சிமென்ட் தடுப்பு சேதம் அடைந்துள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊத்துக்கோட்டை மற்றும் இணைப்பு சாலை வழியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த சாலை மார்க்கத்தில் சூளைமேனி கிராமத்தில் இருந்து வலதுபுறம் செல்லும் சாலையில் உள்ளது தேர்வாய் சிப்காட் தொழிற்பூங்கா.
இங்கு, 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், உதிரி பாகங்கள் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இந்த சாலை வழியே செல்கின்றன.
போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் உள்ள சிமென்ட் தடுப்பு சேதம் அடைந்து உள்ளன. இதனால் இரவு நேரங்களில் இந்த தடுப்பு மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, சூளைமேனி, தண்டலம் ஆகிய பகுதிகளில் சேதம் அடைந்துள்ள தடுப்பை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.