/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 23, 2024 11:54 PM

திருவள்ளூர், சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலையில் பேனர், கொடிக்கம்பங்கள், விளம்பர தட்டிகளை வைக்க தடை விதித்துள்ளது.
ஆனால் அவ்வாறு விளம்பர பேனர்கள் வைப்பது தற்போதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது, நெடுஞ்சாலையோர மின்கம்பங்கள், மரங்களில் விளம்பர பேனர்கள், தட்டிகள் வைப்பது அதிகரித்து வருகின்றன. இவ்வாறு, வைக்கப்படும் விளம்பர தட்டிகள், பேனர்களால் வாகனங்களில் செல்வோர் கவனம் சிதறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும், மின்கம்பங்களில் விளம்பரங்கள் வைப்பதால் மின்வாரிய ஊழியர்கள் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் மின்கம்பங்களில் வைக்கப்படும் விளம்பர தட்டிகள், பேனர்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நெடுஞ்சாலையோர மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தெரிவித்தார்.