/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் தரைப்பாலம் 5வது முறையாக 'டமால்' தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகள்
/
கூவம் தரைப்பாலம் 5வது முறையாக 'டமால்' தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகள்
கூவம் தரைப்பாலம் 5வது முறையாக 'டமால்' தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகள்
கூவம் தரைப்பாலம் 5வது முறையாக 'டமால்' தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 20, 2024 12:11 AM

கடம்பத்துார், திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் சத்தரை கண்டிகை வழியாக கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
கடந்த 2016, 2021, 2022, 2023ம் ஆண்டு என, நான்கு முறை ரைப்பாலம் சேதமடைந்தும் உயர் மட்ட பாலம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்த தரைப்பாலம், சில தினங்களுக்கு முன் பெய்த வெள்ளநீரில் மூழ்கியது.
இதையடுத்து, வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் ஆந்திரா உட்பட பிற மாநிலங்களிலிருந்து கடம்பத்துார் ரயில்வே மேம்பாலம் வழியாக வந்த கனரக வாகனங்கள் திருவள்ளூர், மணவாளநகர் வழியாக ஸ்ரீபெரும்புதுார் சென்று வருகின்றன.
இந்நிலையில், வெள்ளநீரில் சேதமடைந்த தரைப்பாலம் தற்போது மிகவும் சேதமடைந்தது. இதையடுத்து தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.
ஐந்தாவது முறையாக நேற்று சேதமடைந்துள்ளதால், பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே மாவட்ட நிர்வாகம் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என; வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலைத் துறை வாயிலாக புதிய பாலம் கட்ட 20 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன் டெண்டர் விடப்பட்டு, புதிய பால பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.