/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொது இயக்க அட்டை பயன்படுத்தும் வசதி எம்.டி.சி., புதிய டிக்கெட் கருவியில் இல்லை
/
பொது இயக்க அட்டை பயன்படுத்தும் வசதி எம்.டி.சி., புதிய டிக்கெட் கருவியில் இல்லை
பொது இயக்க அட்டை பயன்படுத்தும் வசதி எம்.டி.சி., புதிய டிக்கெட் கருவியில் இல்லை
பொது இயக்க அட்டை பயன்படுத்தும் வசதி எம்.டி.சி., புதிய டிக்கெட் கருவியில் இல்லை
ADDED : மார் 01, 2024 09:30 PM
சென்னை:மாநகர போக்குவரத்து கழகத்தில் பயணியருக்கு டிக்கெட் வழங்க, புதிய வகை மின்னணு டிக்கெட் கருவி, கடந்த 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 130 மாநகர பேருந்துகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த கருவி வாயிலாக, பேருந்துகளில் வழங்கப்பட்ட டிக்கெட் விபரங்கள், வசூல் தொகை, பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரியவரும்.
பயணியர் எண்ணிக்கை, அவர்கள் பயணிக்கும் துாரம், பேருந்துகளில் காலி இருக்கைகள், பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றனவா போன்ற விபரங்களை, போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள், உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.
ஆனால், மெட்ரோ ரயில் பயணியர் உபயோகிக்கும் 'தேசிய பொது இயக்க அட்டை'யை, இக்கருவிகளில் பயன்படுத்துவதற்காகன வசதி இடம் பெறவில்லை. இது, பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
முதற்கட்டமாக, பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனையில் இருந்து இயக்கப்படும் 130 மாநகர பேருந்துகளில், புதிய மின்னணு டிக்கெட் கருவி சேவை துவங்கப்பட்டுள்ளது. சில மாதங்களில், படிப்படியாக அனைத்து பணிமனை பேருந்துகளில் விரிவுப்படுத்தப்படும்.
டெபிட், கிரடிட் கார்டுகள், மொபைல் செயலியான 'ஜிபே' போன்றவற்றின் வாயிலாக கட்டணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
மெட்ரோவில் பயன்படுத்தப்படும் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தும் வகையில், சில மாற்றங்கள் செய்து வருகிறோம். சில வாரங்களில் இந்த பணியும் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

