/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் மர்ம காய்ச்சல் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்
/
பொன்னேரியில் மர்ம காய்ச்சல் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்
பொன்னேரியில் மர்ம காய்ச்சல் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்
பொன்னேரியில் மர்ம காய்ச்சல் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்
ADDED : அக் 01, 2025 01:27 AM

பொன்னேரி:பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுவர்கள் அதிகரித்து வரும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் சுகாதார பணிகளில் தீவிரம் காட்டாமல் அலட்சியம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு அவற்றை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் பரவி வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் அதிகரித்து உள்ளனர்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில், தினமும், 1,000 புறநோயாளிகள் வரை சிகிச்சைக்கு வருகின்றனர். அதில், 400 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களாக உள்ளனர்.
காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்கள் ரத்த பரிசோதனைக்கு உட்படுத்தி, பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
பொன்னேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் காய்ச்சல் அதிகரித்து உள்ள நிலையில், போதுமான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரம் காட்டாமல் இருக்கின்றன.
குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, அவற்றில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளன. பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் எங்கும் கொசு மருந்து அடிப்பதில்லை.
காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடங்களில் துாய்மை மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளது. இதனால் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 15வார்டில், இருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். அங்கு இதுவரை நகராட்சி நிர்வாகம் எந்தவொரு சுகாதார பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இதே நிலைதான் பல்வேறு பகுதிகளிலும் உள்ளது.
அவர்கள் கூறியதாவது:
பொன்னேரி அரசு மருத்துமனையில் டெங்கு பரிசோதனை மேற்கொள்வதில்லை. ரத்த தட்டுக்கள் பரிசோதனை செய்து, ஒரு லட்சத்திற்கு குறைவாக இருந்தால், அவர்கள் சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
அங்குதான் அவர்களுக்கு டெங்கு பரிசோதனை செய்யப்படுகிறது. உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களுக்கு கொசுவலைகள் அமைக்கப்படவில்லை.
நகராட்சி நிர்வாகத்தால், மருத்துவமனை வளாகத்தில் தினமும் கொசு மருந்து அடிப்பதில்லை. இதனால் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளுடன் வரும் உதவியாளர்களும் தொற்று பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.