/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நல்லுார் கால்வாய் பாலம் பலவீனம் அடையும் அபாயம்
/
நல்லுார் கால்வாய் பாலம் பலவீனம் அடையும் அபாயம்
ADDED : மே 12, 2025 12:20 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த நல்லுார் கிராமத்தில், சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயின் குறுக்கே, வாகன போக்குவரத்திற்காக சிறுபாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாலத்தின் இருபுறமும் செடிகள், மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், பாலத்தின் உறுதித்தன்மை கேள்விகுறியாகி வருகிறது. இதனால், பாலம் பலவீனம் அடைந்து, இடிந்து விழும் நிலை உள்ளது.
மேலும், சென்னையின் குடிநீர் தேவைக்காக, சோழவரம் ஏரியில் பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு மழைநீர் வெளியேற்றும்போது, பாலத்தின் இருபுறமும் வளர்ந்த மரம், செடிகளால் தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
பாலம் பராமரிப்பு இன்றி இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, பாலத்தை உடனடியாக ஆய்வு செய்து, தேவையான பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.