/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சித்துார் சாலை விரிவாக்கத்தில் அலட்சியம்
/
சித்துார் சாலை விரிவாக்கத்தில் அலட்சியம்
ADDED : ஜூன் 23, 2025 03:13 AM

ஆர்.கே.பேட்டை:திருத்தணியில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
எர்ப்பநாயுடுகண்டிகையில் இருந்து பீரகுப்பம் வரையிலும், அஸ்வரேவந்தாபுரத்தில் இருந்து கோபாலபுரம் வரையிலும், இரண்டு கட்டமாக விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
இந்த விரிவாக்க பணிகளில் பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தாமல் நடைபெறுதால், சமீபத்தில் கே.ஜி.கண்டிகை பகுதியில் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டன. இதில், ஐந்து பேர் இறந்தனர்.
இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணிகளை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், தொடர்ந்து அலட்சியமாகவே பணிகள் நடந்து வருகின்றன.
பாலம் விரிவாக்கம் செய்யப்படும் பகுதியிலும் எச்சரிக்கை பதாகைகள், சாலை மைய தடுப்புகள் இன்றி அலட்சியமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களும் உரிய பாதுகாப்பு இன்றி சாலையில் பணியாற்றி வருகின்றனர். மண் அள்ளும் இயந்திரங்களும் சாலையில் பணியில் ஈடுபட்டு உள்ளன.
இந்த இயந்திரங்களின் இயக்கம் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு எந்தவித எச்சரிக்கையும் செய்ய உதவியாளர்கள் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.