/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிளை நுாலகம் பராமரிப்பில் அலட்சியம் கொப்பூரில் 'பார்', கிடங்காக மாறிய அவலம்
/
கிளை நுாலகம் பராமரிப்பில் அலட்சியம் கொப்பூரில் 'பார்', கிடங்காக மாறிய அவலம்
கிளை நுாலகம் பராமரிப்பில் அலட்சியம் கொப்பூரில் 'பார்', கிடங்காக மாறிய அவலம்
கிளை நுாலகம் பராமரிப்பில் அலட்சியம் கொப்பூரில் 'பார்', கிடங்காக மாறிய அவலம்
ADDED : ஜன 02, 2025 01:39 AM

கொப்பூர்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொப்பூர். இங்கு அரசு பள்ளி, கிராம சேவை மையம் அருகே, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கிளை நுாலகத்தை பகுதிவாசிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நுாலகம், போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டடம் மிகவும் சேமடைந்துள்ளது. மேலும், தற்போது அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், வீடு கட்ட தேவையான கட்டட பொருட்கள் மற்றும் சிமென்ட் போன்ற பொருட்களை வைக்கும் கிடங்காக செயல்படுத்தி வருவதோடு, மது அருந்தும் கூடாரமாகவும் மாறி விட்டது.
தற்போது, கடம்பத்துார் ஒன்றியத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிளை நுாலகங்கள் தலா, 1.40 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கொப்பூர் கிளை நுாலகத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வராதது நுாலக வாசகர்கள் மற்றும் பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிளை நுாலகத்தை ஆய்வு செய்து சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கொப்பூர் பகுதிவாசிகள் மற்றும் நுாலக வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது:
கொப்பூரில் கிளை நுாலகம் தற்போது, கிராம சேவை மையத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும், பழுதடைந்த கிளை நுாலகத்தை சீரமைக்கவும், ஆக்கிரமிப்பு குறித்தும் ஒன்றிய அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளோம்.
அரசிடமிருந்த உத்தரவு வந்தவுடன், பழுதடைந்த கிளை நுாலகத்தை இடித்து அகற்றவும், புதிய கிளை நுாலகம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.