/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தம்பதி இடையே தகராறு புதுமாப்பிள்ளை தற்கொலை
/
தம்பதி இடையே தகராறு புதுமாப்பிள்ளை தற்கொலை
ADDED : செப் 25, 2025 02:35 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே திருமணமான 20 நாளில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 37; தனியார் பள்ளி வாகன ஓட்டுநர். இவர், இதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஜெயஸ்ரீ, 24, என்பவரை, கடந்த 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர் வீட்டின் அருகே கார்த்திகேயன் வசித்து வந்த நிலையில், வேறு இடம் செல்வது குறித்து, கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன், மனைவியை பக்கத்து அறையில் பூட்டிவிட்டு, தன் அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
இதையடுத்து, ஜெயஸ்ரீயின் அலறல் சத்தத்தைக் கேட்ட, அவ்வழியாக ரோந்து வந்த செவ்வாப்பேட்டை போலீசார், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கார்த்திகேயன் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பின், செவ்வாப்பேட்டை போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 20 நாளில், கணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.