/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்டவாளத்தை கடந்த வடமாநில தொழிலாளி பலி
/
தண்டவாளத்தை கடந்த வடமாநில தொழிலாளி பலி
ADDED : ஜூலை 08, 2025 09:34 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில தொழிலாளி ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.
மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் - அத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பகுதியில், ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, நேற்று முன்தினம் இரவு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்த விசாரணையில், இறந்த நபர் உத்தர பிரதேசம் மாநிலம், விலுந்தா மாவட்டம், திபாய் பகுதியை சேர்ந்த புவனேஷ்குமார், 34, என்பதும், அத்திப்பட்டு பகுதியில் தங்கி, கூலித்தொழில் செய்து வந்ததும் தெரிந்தது.
தொடர் விசாரணையில், பணிமுடிந்து தங்கியிருக்கும் இடத்திற்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது, வடமாநிலங்களுக்கு செல்லும், நாகன் விரைவு ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது.