/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் நாற்றங்கால் வளர்ப்பு பயிற்சி
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் நாற்றங்கால் வளர்ப்பு பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் நாற்றங்கால் வளர்ப்பு பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் நாற்றங்கால் வளர்ப்பு பயிற்சி
ADDED : ஜூலை 08, 2025 09:32 PM
திருவூர்:திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை, 'நாற்றங்கால் உற்பத்தி' குறித்த திறன் வளர்க்கும் பயிற்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருவூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குநர் பானுமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம் திருவூரில் வேளாண் அறிவியல் நிலையம் அமைந்துள்ளது.
இங்கு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், பள்ளி கல்வி நிறைவுற்ற வேலையில்லா ஊரக இளைஞர்களுக்காக, நாற்றங்கால் உற்பத்தி குறித்த திறன் வளர்க்கும் பயிற்சி, வரும் 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், வேலையில்லா ஊரக இளைஞர்கள் சுயமாக நாற்றங்கால் அமைப்பதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் குறித்த விரிவான பயிற்சி வழங்கப்படும்.
இந்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களும் நடைபெறும்.
ஊரக இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். இந்த இலவச பயிற்சியில், 18 - -35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.
மேலும், உணவு, தங்கும் இடம் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும்.
முதலில் பதிவு செய்யும் 30 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, 73389 44311, 98848 76883 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.