/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமான வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
/
சேதமான வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
ADDED : நவ 16, 2024 01:43 AM

திருவாலங்காடு:திருத்தணி தாலுகா, மணவூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மணவூரில் ஊராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது.
இங்கு மணவூர் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பகுதிவாசிகள், வருவாய் நிலம் தொடர்பான பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகத்தின் மேல்தளம் பழுதடைந்து ஆங்காங்கே விரிசல் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதே வளாகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கும் வந்து செல்லும் பகுதிவாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
அலுவலக வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டத்தை, பாதுகாப்பு கருதி உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.