/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நம்பர் பிளேட்டில் பெயர்கள் படங்கள் வைப்பது அதிகரிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : ஜூன் 07, 2025 10:46 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி உட்பட ஒன்பது தாலுகாக்களில் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்களின் நம்பர் பிளேட்டில், வாகன எண்கள் பலகையில் பெயர்கள், படங்கள், ஜாதிகளை குறிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது அதிகரித்துள்ளது.
நம்பர் பிளேட்டில் பெயர்கள் எழுதுவது அல்லது தனிப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டினால் அபராதம் விதிக்கப்டும். நம்பர் பிளேட்டில் வாகன பதிவு எண்ணை தவிர வேறு எந்த எழுத்துக்களும், ஸ்டிக்கர்களும் இருக்கக் கூடாது.
நம்பர் பிளேட்டில் தவறான எழுத்துக்கள் அல்லது ஸ்டிக்கர்கள் இருந்தால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படும். பல்வேறு மாநிலங்களில், தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதை தடை செய்துள்ளனர்.
தமிழகத்தில் நம்பர் பிளேட்டில் 'போலீஸ், பிரஸ்' போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதையும், காவல் துறை அனுமதி இல்லாமல் வேறு ஏதேனும் சின்னங்கள், குறியீடுகள், தங்கள் பணி தொடர்பான அடையாளங்களை வெளிப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், டிராபிக் போலீசாரோ, வட்டார போக்குவரத்து அலுவலர்களோ இதை கண்காணிப்பதே கிடையாது. எனவே, உயரதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.