/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாட்டு தொழுவமாக மாறிய பழைய பள்ளி இடம்
/
மாட்டு தொழுவமாக மாறிய பழைய பள்ளி இடம்
ADDED : டிச 08, 2024 02:28 AM

திருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடு குப்பம் ஊராட்சியில், அரசு உயர்நிலைப் பள்ளி, 15 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தபட்டது. மேல்நிலைப் பள்ளிக்கு ஏற்றவாறு புதிதாக பள்ளி கட்டடம் கொசஸ்தலையாற்றின் அருகே அரசுக்கு சொந்தமான 2 ஏக்கரில் கட்டடப்பட்டது.
இந்நிலையில் உயர்நிலைப் பள்ளி இருந்த இடத்தில் கட்டடம் பயன்படுத்தாமல் விட்டப்பட்டது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த சிலர், கட்டடங்களை ஆக்கிரமித்து மாட்டு தொழுவமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, ஆற்காடு குப்பம் மேல்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கும் நிலையில், பெண்கள் மேல்நிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளி இருந்த இடத்தில் அமைக்க வேண்டும் என, மாணவியரின் பெற்றோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
உயர்நிலைப் பள்ளி இருந்த இடத்தை, மாட்டு தொழுவமாக மாற்றியுள்ளது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.