ADDED : ஆக 16, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் - புட்லுார் ரயில் நிலையங்களுக்கு இடையே விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில், நேற்று முன்தினம் மாலை ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக, திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து வந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.