/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை -- கோயம்பேடு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
/
ஊத்துக்கோட்டை -- கோயம்பேடு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை -- கோயம்பேடு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை -- கோயம்பேடு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : அக் 06, 2024 08:29 PM
ஊத்துக்கோட்டை:சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி உள்ளது. தமிழக -- ஆந்திர எல்லையில் உள்ள இவ்வூரைச் சுற்றி, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர், தங்களின் அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.
மேலும், மருத்துவம், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் உள்ளிட்டோர் ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர். சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தோர், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக, ஊத்துக்கோட்டை சென்று, அங்கிருந்து அரசு பேருந்து வாயிலாக பயணிக்க வேண்டும்.
இவர்கள் தினமும் அரசு பேருந்துகளையே நம்பி உள்ளனர். ஊத்துக்கோட்டையில் இருந்து அதிகாலை 3:50 மணிக்கு இயக்கப்படும் தடம் எண்: 112ஏ என்ற அரசு பேருந்து, கோயம்பேடு சென்று, அங்கிருந்து சத்தியவேடு மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.
புத்துார் -- கோயம்பேடு செல்லும் பேருந்து, காலை 7:00 மணிக்கு ஊத்துக்கோட்டை சென்று, பின் கோயம்பேடு செல்கிறது. இதன் காரணமாக நேரம் விரயமாகிறது. மேலும், செல்ல வேண்டிய இடத்திற்கு தாமதமாக செல்லும் நிலை உள்ளது.
ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து இயக்கப்படும், 35 பேருந்துகளில், 15க்கும் மேற்பட்ட பேருந்துகள் கள்ளக்குறிச்சி, திருச்சி, காளஹஸ்தி, சத்தியவேடு, புதுச்சேரி, நெல்லுார், திருப்பதி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.
உள்ளூர் மக்கள் அவதிப்படும் நிலையில், வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை, ஊத்துக்கோட்டை -- கோயம்பேடு மார்க்கத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.