/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி எதிரே திறந்த நிலை கால்வாய்
/
அரசு பள்ளி எதிரே திறந்த நிலை கால்வாய்
ADDED : அக் 28, 2024 01:35 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில், இரண்டு அரசு தொடக்க பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
கிராமத்தின் மேற்கில் செல்லாத்தம்மன் கோவில் எதிரே செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளியில், 150 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியின் நுழைவாயிலை ஒட்டி, கழிவுநீர் கால்வாய் பாய்கிறது. பள்ளி வளாகத்தை ஒட்டி கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து கிடக்கிறது.
சீரழிந்துள்ள இந்த கால்வாய், மண்ணரிப்பால், ஒரு மீட்டர் அலத்திற்கு அகண்ட கால்வாயாக மாறியுள்ளது. இதனால், இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழைக்காலத்தில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருவில் பாயும் நிலை உள்ளது. கால்வாயை ஒட்டி கிளை நுாலகமும் செயல்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள், நுாலக வாசகர்கள் நலன் கருதி இந்த கால்வாயை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

