/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபாட்டிகள் கடத்தலை தடுக்க சோதனைச்சாவடி அமைக்க உத்தரவு
/
மதுபாட்டிகள் கடத்தலை தடுக்க சோதனைச்சாவடி அமைக்க உத்தரவு
மதுபாட்டிகள் கடத்தலை தடுக்க சோதனைச்சாவடி அமைக்க உத்தரவு
மதுபாட்டிகள் கடத்தலை தடுக்க சோதனைச்சாவடி அமைக்க உத்தரவு
ADDED : மே 20, 2025 12:15 AM
திருவள்ளூர்,
திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பனையை ஒழிப்பது தொடர்பாக, அலுவலர்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளுர் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது கள்ளச்சாராயம், மதுபானங்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டு வரும் நபர்கள் மட்டுமல்லாமல், வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சந்து கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அதை வாங்கி வந்த கடையின் விற்பனையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
சோதனைச்சாவடிகளில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தி, அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் வருவதை அடையாளம் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பென்னலுார்பேட்டை, நகரி -- சித்துார் போன்ற பை-பாஸ் சாலைகளில், காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும், டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனையாவதை மண்டல மேலாளர் கண்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லுாரி பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடைகளில் போதை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த கடையின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.