/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேல்விளாகம் கொசஸ்தலை ஆற்றில் ரூ.14 கோடியில் மேம்பால பணி வேகம்
/
மேல்விளாகம் கொசஸ்தலை ஆற்றில் ரூ.14 கோடியில் மேம்பால பணி வேகம்
மேல்விளாகம் கொசஸ்தலை ஆற்றில் ரூ.14 கோடியில் மேம்பால பணி வேகம்
மேல்விளாகம் கொசஸ்தலை ஆற்றில் ரூ.14 கோடியில் மேம்பால பணி வேகம்
ADDED : ஏப் 26, 2025 02:13 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெமிலி அகரம் ஊராட்சி.
இந்த ஊராட்சிக்கு அருகில், நெமிலி அகரம் காலனி, கீழ்விளாகம் கிராமம் மற்றும் காலனி, மேல்விளாகம் கிராமம் மற்றும் காலனி, கலியனுார் கிராமம் மற்றும் காலனி உட்பட எட்டு கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள், உயர் கல்வி பயிலவும், வேலை, மருத்துவ தேவை, அத்தியாவசிய பொருட்கள் வாங்க திருவள்ளூர் செல்ல வேண்டும்.
இதற்காக, இந்த கிராம மக்கள், நெமிலி அகரம் காலனியில் இருந்து, கொசஸ்தலை ஆற்றில் உள்ள, தரைப்பாலம் வழியாக விடையூர் வந்து, அங்கிருந்து திருவள்ளூர் செல்கின்றனர்.
ஒவ்வொரு பருவமழை காலத்திலம், கொசஸ்தலை ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், விடையூரில் உள்ள அரசு பள்ளிக்கு செல்வோரும், திருவள்ளூர் செல்வோரும், தங்கள் கிராமங்களில் இருந்து, நார்த்தவாடா, கூடல்வாடி வழியாக மஞ்சாங்குப்பம், பட்டரைபெரும்புதுார், கனகவல்லிபுரம் வந்து 16 கி.மீ., சுற்றி வரவேண்டி உள்ளது.
இதனால், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர், ஆபத்தான முறையில், கொசஸ்தலை ஆற்றில் ஓடும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல், கடந்து வருகின்றனர்.
இதையடுத்து, மேல்விளாகம் காலனி-நெமிலி அகரம் கிராம சாலைக்கு செல்லும் வகையில், கொசஸ்தலை ஆற்றில் 13.69 லட்சம் ரூபாய் மதிப்பில், 2023ல் பணி துவங்கியது.
மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது ஆற்றில் வெள்ளம் வடிந்ததால் மேம்பால பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.