/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை 30 ஏக்கரில் பயிரிட்ட நெல் பாழாகும் அபாயம்
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை 30 ஏக்கரில் பயிரிட்ட நெல் பாழாகும் அபாயம்
நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை 30 ஏக்கரில் பயிரிட்ட நெல் பாழாகும் அபாயம்
நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை 30 ஏக்கரில் பயிரிட்ட நெல் பாழாகும் அபாயம்
ADDED : மே 12, 2025 11:27 PM
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சியில், 3,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் வசதிக்காக நவரை பருவத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரியகளக்காட்டூரில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரமாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால், சின்னகளக்காட்டூர், பெரியகளக்காட்டூர் கிராமங்களில், மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள கிராம சேவை மையம், வீடுகளின் வெளியே என, கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் தேங்கியுள்ளது.
நேற்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்த நிலையில், விவசாயிகள் தங்கள் நெல்லை தார்ப்பாய் மூடி பாதுகாத்தனர்.
இதுகுறித்து, பெரியகளக்காட்டூர் விவசாயிகள் கூறியதாவது:
கொள்முதல் நிலையத்தில் நெல் வாங்க கோணிப்பை இல்லை. ஆட்கள் பற்றாக்குறை என, கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு மூட்டை நெல்லுக்கு, 60 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
இதுதொடர்பாக, கேள்வி கேட்கும் விவசாயிகள், நெல்லை தாமதமாக வாங்குகின்றனர். தற்போது, 30 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்ட நெல் இங்கே உள்ளது. கோடை மழை பெய்த நிலையில், தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளோம்.
தொடர்ந்து, கோடை மழை பெய்யும் நிலை உள்ளதால், தார்ப்பாயை வாடகைக்கு எடுத்து நெல் நனையாமல் பாதுகாத்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் உயரதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதில்லை. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.