/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற பானம்பாக்கம் சாலை
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற பானம்பாக்கம் சாலை
ADDED : ஜூன் 20, 2025 01:57 AM

பேரம்பாக்கம்:போக்குவரத்துக்கு லாயக்கற்று குண்டும், குழியுமாக உள்ள பானம்பாக்கம் சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியில் இருந்து சிற்றம்பாக்கம், செஞ்சி வழியாக பானம்பாக்கம் ரயில்நிலையம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலையை பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி ரயில் நிலையம் சென்று சென்னை மற்றும் அரக்கோணம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து பல்லாங்குழியாக மாறி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியே இருசக்கர வாகனம், ேஷர் ஆட்டோக்களில் செல்லும் பகுதிவாசிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
இரு சக்கர வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.