/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'அம்மா' பூங்கா பராமரிப்பில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
'அம்மா' பூங்கா பராமரிப்பில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
'அம்மா' பூங்கா பராமரிப்பில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
'அம்மா' பூங்கா பராமரிப்பில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : ஜூன் 16, 2025 02:12 AM

வெங்கத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார் ஊராட்சியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி, 2018 பிப்ரவரி மாதம் துவங்கி, 2020ம் ஆண்டு நிறைவடைந்தது.
இந்த பூங்காவில் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால், பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
மேலும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இதனால், 'குடி'மகன்கள் பூங்காவை மதுக்கூடமாக மாற்றிவிட்டனர். இது, அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, 'அம்மா' பூங்காவை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.