/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்றங்கரையோரம் உள்ள அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பெற்றோர் கோரிக்கை

ADDED : அக் 31, 2025 07:47 PM
பள்ளிப்பட்டு: ஆற்றங்கரையோரம் உள்ள அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டையில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியை ஒட்டி கொசஸ்தலை ஆறு பாய்கிறது. கடந்த 2021ல் ஆற்றில் வெள்ளம் கடை புரண்டு பாய்ந்தது. அப்போது பள்ளிக்கு அருகே, கரையை தாண்டி திசை மாறி பள்ளி வளாகத்திற்குள் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதில், பள்ளியின் வகுப்பறையில் 10 அடி ஆழத்திற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது.
மேலும், பள்ளியின் சுற்றுச்சுவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பள்ளியை தாண்டி வயல்வெளியில் பெரும் மண்ணரிப்பை ஏற்படுத்திய இந்த வெள்ளம், சொரக்காய்பேட்டை தடுப்பணையை தாண்டி மீண்டும் கொசஸ்தலை ஆற்றில் கலந்தது.
இந்த பாதிப்பை தொடர்ந்து, வகுப்பறை கட்டடம் சீரமைக்கப்பட்டது. ஆனால், கரையை ஒட்டி பள்ளியின் சுற்றுச்சுவர் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த கால பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்த சுற்றுச்சுவரை வலுவாகவும், விரைவாகவும் கட்ட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.