/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொரோனாவில் நிறுத்திய புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்காததால் பயணியர் தவிப்பு
/
கொரோனாவில் நிறுத்திய புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்காததால் பயணியர் தவிப்பு
கொரோனாவில் நிறுத்திய புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்காததால் பயணியர் தவிப்பு
கொரோனாவில் நிறுத்திய புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்காததால் பயணியர் தவிப்பு
ADDED : நவ 23, 2025 03:06 AM
பொன்னேரி: கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்பட்ட நள்ளிரவு நேர ரயில்கள், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கப்படாததால் பயணியர் தவித்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் -- கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், 80 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், நள்ளிரவு 12:20 மணிக்கு, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, இரவு நேர கடைசி புறநகர் ரயில் இயக்கப்பட்டு வந்தது.
எண்ணுார், கத்திவாக்கம், திருவொற்றியூர் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பகல் - இரவு ஷிப்டு முடித்து,
நள்ளிரவு வீடு திரும்ப மேற்கண்ட புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 2020ல் கொரோனா தொற்று பரவல் காரணமாக, புறநகர் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின் படிப்படியாக இயக்கப்பட்டன. அதே சமயம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்பட்ட நள்ளிரவு, 12:20 மணி ரயில் சேவை மீண்டும் துவங்கவில்லை.
இதனால், தொழிற்சாலைகள் மற்றும் ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது, இரவு நேர கடைசி ரயிலாக, 11:20 மணிக்கு இயக்கப்படுகிறது.
இதை தவறவிட்டால், மறுநாள் அதிகாலை 4:20 மணிக்கு, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயிலுக்காக காத்திருக்கின்றனர். இரவு முழுதும் துாங்க முடியாமல் ரயில் நிலையத்தில் காத்திருந்து சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அதேபோல, அதிகாலை 2:40 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறநகர் ரயில் சேவை இருந்தது.
இதன் மூலம், வியாபாரிகள், பால் முகவர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் பயணித்து வந்தனர்.
இந்த ரயில் சேவையும் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கவில்லை. இதனால் வியாபாரிகள், தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மேற்கண்ட புறநகர் ரயில்களை மீண்டும் இயக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

