/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உரிய ஆவணம் இல்லாத 10 ஆட்டோக்களுக்கு அபராதம்
/
உரிய ஆவணம் இல்லாத 10 ஆட்டோக்களுக்கு அபராதம்
ADDED : பிப் 09, 2024 08:22 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு தேரடி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டு அமைந்துள்ளது. இங்கு திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 52 பேர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.
இங்கு லைசன்ஸ், ஆர்.சி., புக், இல்லாமல் ஆட்டோ இயக்குபவர்கள், இன்சூரன்ஸ் காலாவதியானது மற்றும் காக்கி உடை அணியாமல் ஆட்டோ ஓட்டுவது போன்ற செயல்களில் ஓட்டுனர்கள் ஈடுபடுவதாக புகார் வந்தது.
இதையடுத்து திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் நேற்று தேரடி ஆட்டோ ஸ்டான்டில்ஆய்வு செய்தனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இருந்த, 10 ஆட்டோக்களின் உரிமையாளர்களுக்கு தலா, 500 வீதம், 5,000 ரூபாய் அபராதமாக விதித்தனர்.
இதேபோல, மணவூர் ஆட்டோ ஸ்டான்டில் மூன்று பேருக்கு தலா 500 வீதம் 1,500 ரூபாய் அபராதமாக விதித்தனர்.
மேலும் திருவாலங்காடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பர்மிட் 1இல்லாமல் இயங்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறையினர் தெரிவித்தனர்.