/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் குளத்தை சூழ்ந்த ஆகாயத்தாமரை; நகராட்சி நிர்வாகம் மீது மக்கள் அதிருப்தி

ADDED : செப் 21, 2025 11:50 PM

பொன்னேரி:பொன்னேரியில் ஆகாயத்தாமரை சூழ்ந்தும், கழிவுநீர், குப்பை குவிந்து பாழாகி வரும் குளத்தை சீரமைக்காத நகராட்சி நிர்வாகம் மீது, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட கும்மமுனிமங்களம் பகுதியில் உள்ள குளம் பராமரிப்பு இன்றி உள்ளது. குளம் முழுதும் ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளது. சுற்றிலும் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர், குளத்தில் விடப்படுவதால் மாசடைந்து வருகிறது.
பொன்னேரி நகர பகுதிக்குள், இங்கு மட்டும் தான் விசாலமான குளம் உள்ளது. அதுவும் பராமரிப்பின்றி பாழாகி வருவதை கண்டு, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கால்வாய், சாலை, மின்விளக்கு என, நகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அதேசமயம், பல ஆண்டுகளாக கவனிப்பாரின்றி, ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளால் பாழாகி வரும் குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்படவில்லை.
இதனால், குளம் பாழாகி வருவதுடன், ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், காலப்போக்கில் குளம் இருந்த சுவடே தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கும்.
எனவே, உடனடியாக குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அக ற்றி, சுற்றிலும், நடைபயிற்சி செய்வதற்கான நடைபாதை மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.