/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் 'கட்' மின்வாரியத்தின் செயலால் மக்கள் அதிருப்தி
/
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் 'கட்' மின்வாரியத்தின் செயலால் மக்கள் அதிருப்தி
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் 'கட்' மின்வாரியத்தின் செயலால் மக்கள் அதிருப்தி
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் 'கட்' மின்வாரியத்தின் செயலால் மக்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 30, 2025 12:18 AM
திருவாலங்காடு, திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவூர், திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, கடம்பத்துாரில் அமைந்துள்ள துணைமின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த கிராமங்களில், சில மாதங்களாக தினமும் பகல் நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும், இரவு நேரங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் மின் வினியோகம் தடைபடுகிறது.
சில நாட்களில், தொடர்ந்து இரண்டு முதல் மூன்று மணி நேரமும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதிமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட திருவாலங்காடு மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, சின்னம்மாபேட்டை கிராம மக்கள் கூறியதாவது:
சில மாதங்களுக்கு முன் லேசான காற்று, மழை பெய்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்தது. தற்போது, எவ்வித காரணமும் இன்றி துண்டிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கேட்டால் பராமரிப்பு, மின்கம்பிகள் உராய்வு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் தடை ஏற்படுகிறது என்கின்றனர்.
மாதாந்திர பராமரிப்பு என, மாதத்தில் முதல் அல்லது மூன்றாவது சனிக்கிழமை காலை 9:00 - மாலை 5:00 மணி வரை மின்சாரம் துண்டிப்பது ஏன் என தெரியவில்லை. இதற்கு, உயரதிகாரிகள் மெத்தனமே காரணம். எனவே, மின்தடை பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.