/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டரைபெரும்புதுார் ஏரியில் மண் கொள்ளை 100 லாரிகளை சிறைபிடித்து மக்கள் முற்றுகை
/
பட்டரைபெரும்புதுார் ஏரியில் மண் கொள்ளை 100 லாரிகளை சிறைபிடித்து மக்கள் முற்றுகை
பட்டரைபெரும்புதுார் ஏரியில் மண் கொள்ளை 100 லாரிகளை சிறைபிடித்து மக்கள் முற்றுகை
பட்டரைபெரும்புதுார் ஏரியில் மண் கொள்ளை 100 லாரிகளை சிறைபிடித்து மக்கள் முற்றுகை
ADDED : ஜூலை 28, 2025 11:36 PM

திருவள்ளூர், பட்டரைபெரும்புதுார் ஏரியில், அளவுக்கு அதிகமாக சவுடு மண் எடுக்கப்பட்டு வருவதாக கூறி, பகுதிமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன், எண்ணுார் அனல்மின் நிலையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் மேம்பாட்டு பணி நடைபெற்று வருகிறது.
விதிமீறல் இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் சவுடு மண் எடுக்க, அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தற்போது, சாலை பணிகளுக்காக புன்னப்பாக்கம், திருத்தணி, வெங்கல் ஏனம்பாக்கம், கல்பேடு பட்டரைபெரும்புதுார் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட ஏரிகளில் குவாரி ஏலம் விடப்பட்டு உள்ளது.
மேலும், ஆரணி, நெமிலி அகரம் ஏரிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சவுடு மண் எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சாலை பணி மற்றும் விற்பனைக்காக அனுமதி வழங்கப்பட்ட ஏரிகளில், அரசு நிர்ணயித்த, 3 அடிக்கு பதிலாக, 20 - 30 அடிக்கு மேல் மண் எடுக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் ஏரியில், தற்போது குவாரி அனுமதி பெற்றவர்கள், தினமும் 500 - 1,000 லோடு வரை மண் எடுத்துச் செல்கின்றனர்.
சவுடு மண் குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைவிட, அதிகளவில் பள்ளம் தோண்டி மண் எடுப்பதாக கூறி, நேற்று காலை பகுதிமக்கள் முற்றுகையிட்டனர்.
இதனால், ஏரியில் இருந்து மண் எடுத்து வந்த 100க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நின்றன. விரைந்து வந்த போலீசார் சமாதானம் செய்தனர்.
தடை செய்ய வேண்டும் அப்போது, பகுதிமக்கள் கூறியதாவது:
விவசாயிகள் அதிகம் நிறைந்த பகுதியாக இருப்பதால், விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளன. ஏரியில் தேங்கும் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம்.
தினமும், அளவுக்கு அதிமாக 500 - 1,000 லோடு மண் எடுப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, விவசாயம் செய்ய நீர்பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் நிலை உருவானது. எனவே, பட்டரைபெரும்புதுார் ஏரியில் சவுடு மண் எடுப்பதை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார் சமாதானத்திற்கு பின், பகுதிமக்கள் கலைந்து சென்றதும், 'வழக்கம்'போல் ஏரியில் இருந்து அளவுக்கு அதிமான அளவில் சவுடு மண் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது.

