/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாடு திருடர்கள் இருவரை போலீசில் ஒப்படைத்த மக்கள்
/
மாடு திருடர்கள் இருவரை போலீசில் ஒப்படைத்த மக்கள்
ADDED : மே 26, 2025 11:46 PM
பொன்னேரி, :பொன்னேரி அருகே உள்ள குண்ணம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 40. இவர், பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவரது மாடுகள், அதே பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன.
அப்போது, மர்ம நபர்கள் இருவர், பசு மாடுகளில் இரண்டை பிடித்து லாரியில் ஏற்ற முயன்றனர்.
சந்தேகமடைந்த அப்பகுதிவாசிகள் இருவரையும் பிடித்து, பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தைச் சேர்ந்த சுகுமார், 40, பெரியகாவணத்தைச் சேர்ந்த லித்திக் பாஷா, 28, என்பதும், மாடுகளை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.