/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இன்றி சமுதாய கூடம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
பராமரிப்பு இன்றி சமுதாய கூடம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
பராமரிப்பு இன்றி சமுதாய கூடம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
பராமரிப்பு இன்றி சமுதாய கூடம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 20, 2025 02:12 AM

திருவாலங்காடு:கதவு, ஜன்னல்கள் உடைந்து, பராமரிப்பற்ற நிலையில் உள்ள சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும் என, திருவாலங்காடு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவாலங்காடு ஊராட்சியில், 2,300க்கும் மேற்பட்டகுடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கிராம மக்கள் சுபநிகழ்ச்சிகள் நடத்த போதிய இடமின்றி அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, வடாரண்யேஸ்வரர் கோவில் பின்புறம், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து வசதிகளுடன், 2001ம் ஆண்டு ஒன்றிய நிர்வாகத்தால் சமுதாய கூடம் கட்டப்பட்டது.
இங்கு திருமணம், மஞ்சள் நீராட்டு விழா, காதணி விழா என, பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. இதனால், ஏழை மக்களுக்கு செலவு குறைந்தது.
தற்போது, சமுதாய கூடத்தில் இருந்த மின் விசிறிகள், மின் விளக்குகள் அனைத்தும் சேதமடைந்தன.இதையடுத்து, 2006 - -07ம் ஆண்டு 50,000 ரூபாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து, அருகில் உள்ள 'டாஸ்மாக்' கடைக்கு வரும் 'குடி'மகன்கள், சமுதாய கூடத்தின் முன் அமர்ந்து மது அருந்தி வந்தனர்.
போதை தலைக்கேறியதும், ஜன்னல்களின் கண்ணாடிகள் மற்றும் மின் விளக்குகளை உடைத்து சேதப்படுத்தி விட்டதால், சமுதாய கூடம் மீண்டும் சேதமடைந்தது. இதனால், சமுதாய கூடத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த மக்கள் அச்சப்படுகின்றனர்.
இதன் காரணமாக, கிராம மக்களுக்கு வீண் செலவு அதிகரித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, சமுதாய கூடத்தை சீரமைத்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம ம க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.