/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாயில் விஷ ஜந்துக்கள் அரசு பள்ளி மாணவர்கள் பீதி
/
கால்வாயில் விஷ ஜந்துக்கள் அரசு பள்ளி மாணவர்கள் பீதி
கால்வாயில் விஷ ஜந்துக்கள் அரசு பள்ளி மாணவர்கள் பீதி
கால்வாயில் விஷ ஜந்துக்கள் அரசு பள்ளி மாணவர்கள் பீதி
ADDED : ஏப் 07, 2025 11:59 PM

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், சாமந்தவாடா, புண்ணியம் வழியாக பாய்ந்து செல்கிறது. கொசஸ்தலை ஆற்றின் நீர்வளத்தால், கரையோர கிராமங்களில் விவசாயம் செழிப்பாக நடந்து வருகிறது.
கொசஸ்தலை ஆற்றுக்கு இணையாக பல்வேறு நீர்வரத்து கால்வாய்களும், கண்மாய்களும் உள்ளன. இதில், சொரக்காய்பேட்டை கிராமத்தின் வடக்கில், அரசு மேல்நிலை பள்ளி நுழைவாயில் முன் நீர்வரத்து கால்வாய் உள்ளது.
இந்த கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காணப்படுகிறது. 15 அடி உயரத்திற்கும் மேலாக செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நீர்வரத்து கால்வாயை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.