/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் போலீசார் ஒப்படைப்பு
/
மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் போலீசார் ஒப்படைப்பு
மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் போலீசார் ஒப்படைப்பு
மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் போலீசார் ஒப்படைப்பு
ADDED : டிச 29, 2024 02:58 AM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த, ஆண்டார்குப்பம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, சாலையோரத்தில், 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள கடை அருகே படுத்து உறங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பொன்னேரி போலீசார் அங்கு சென்று, அப்பெண்ணை பாதுகாப்பாக மீட்டு விசாரணை மேற்கொண்டபோது, அவர் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வெவ்வேறு பெயர் மற்றும் ஊர்களை தெரிவித்ததால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
அதையடுத்து, போலீசார் அவரை, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து சோழவரம் பகுதியில் உள்ள அன்பகம் மனநலம் காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று காலை, காப்பகத்தில் இருந்து வந்த நிர்வாகிகளிடம், மீட்கப்பட்ட பெண்ணை போலீசார் ஒப்படைத்தனர். பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முகம்மது ஷகில் உடனிருந்து உதவினார்.
பொன்னேரி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, ராஜா என்பவரின் மனைவி பிரியா, 30, என்பது தெரிய வந்துள்ளது.