/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் முட்டுக்கட்டை கும்மிடி அனைத்து வியாபாரி சங்கம் குற்றச்சாட்டு 9ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்ற நெடுஞ்சாலை துறை உறுதி
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் முட்டுக்கட்டை கும்மிடி அனைத்து வியாபாரி சங்கம் குற்றச்சாட்டு 9ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்ற நெடுஞ்சாலை துறை உறுதி
ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் முட்டுக்கட்டை கும்மிடி அனைத்து வியாபாரி சங்கம் குற்றச்சாட்டு 9ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்ற நெடுஞ்சாலை துறை உறுதி
ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் முட்டுக்கட்டை கும்மிடி அனைத்து வியாபாரி சங்கம் குற்றச்சாட்டு 9ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்ற நெடுஞ்சாலை துறை உறுதி
ADDED : நவ 06, 2024 06:25 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையின் பெரும் பகுதியை, சாலையோர கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால், பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதன் காரணமாக, அவசர வேலையாக செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டி பஜாரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கண்டு, ஏராளமான அரசு பேருந்துகள் நகருக்குள் வராமல், புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன.
சாலையோர கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, வரும் 9ம் தேதி கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என, மாநில நெடுஞ்சாலை துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சாலையோர கடையினரை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., அண்ணாதுரை தலைமையில் நடந்த கூட்டத்தில், நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
இடம் ஒதுக்கிய பின் ஆக்கிரமிப்புகளை அகற்றலாமா என்ற கோணத்தில் போலீசார் பேச்சை துவக்கினர். ஆக்கிரமிப்புகளால் உள்ள சிக்கல்களை, நெடுஞ்சாலை மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் விளக்கமாக பேசினர்.
பின், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் பேசியதாவது:
போலீசார் முறையாக கண்காணிக்க தவறியதால், சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்கிய இடத்தை மீறி, சாலையின் மையப்பகுதி வரை கடைகள் வந்தன.
மேலும், ஏராளமான இரும்பு கட்டமைப்பு கடைகள் சாலையில் முளைத்ததுள்ளன. வாகன பார்க்கிங் பகுதிகளை சாலையோர கடைகள் ஆக்கிரமித்திருப்பதை கண்டுக்கொள்ளாமல், இடமின்றி பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறை நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற தேதி கேட்கும் போது, போதிய போலீசார் இல்லை என, தட்டிக்கழித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண விடாமல், போலீசார் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இறுதியில், சாலையோர இரும்பு கட்டமைப்பு கடைகள் முழுமையாக அகற்றப்படும். மாற்று இடம் தேர்வு செய்யப்படும் வரை, சாலையோர தரைவிரிப்பு கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கி குறிப்பிட்ட அளவிலான இடம் ஒதுக்கப்படும்.
வழங்கிய இடத்தை மீறி கடைகளை விரிவுப்படுத்தினால், அடையாள அட்டை ரத்து செய்து, கடை அகற்றப்படும் என்ற முடிவு எட்டப்பட்டது.
வரும் 9ம் தேதி கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் போலீசார் பாதுகாப்புடன், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.