/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி - பெரும்பேடு சாலைக்கு விமோசனம்
/
பொன்னேரி - பெரும்பேடு சாலைக்கு விமோசனம்
ADDED : அக் 15, 2025 10:56 PM

பொன்னேரி: பாதாள சாக்கடை திட்ட பணிகளின்போது, சேதமடைந்த பொன்னேரி - பெரும்பேடு சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
பொன்னேரி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்ட பணிகளின் ஒரு பகுதியாக, கழிவுநீரை சுத்திகரித்து, ஆரணி ஆற்றில் விட திட்டமிடப்பட்டு உள்ளது.
அதற்காக, பொன்னேரி - பெரும்பேடு சாலையில் உள்ள சின்னகாவணம் பகுதியில் இருந்து, லட்சுமிபுரம் அணைக்கட்டு வரை, 3 கி.மீ.,க்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்பணிகளின் போது, சேதமடைந்த சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வந்தனர். லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையோர பள்ளங்களில் சிக்கி தவித்தன.
இதுகுறித்து, கடந்த மாதம் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பொன்னேரி - பெரும்பேடு சாலையில், சேதமடைந்த இடங்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
சாலையோரங்களில் 2 அடி ஆழத்திற்கு மண்ணை தோண்டி எடுத்து, ஜல்லிக் கற்கள் நிரப்பி, சாலை அமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.