/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதிய மின்மாற்றி அமைத்து மின் வினியோகம்
/
புதிய மின்மாற்றி அமைத்து மின் வினியோகம்
ADDED : ஆக 25, 2025 01:15 AM
திருத்தணி:கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில், புதிய மின்மாற்றி அமைத்து, சீரான மின்சாரம் வினியோகம் செய்வதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில், வீடுகளுக்கும், விவசாய மின்மோட்டார்களுக்கும் ஒரு மாதமாக குறைந்தழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. மேலும், மழை பெய்தாலும், காற்று அடித்தாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல மணி நேரம் கழித்து வினியோகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மின்வாரிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, தற்போது சீரான மின் வினியோகம் செய்து வருகிறது.
கே.ஜி.கண்டிகை துணை மின் நிலைய உதவி பொறியாளர் ஆறுமுகம் கூறியதாவது:
கிருஷ்ணசமுத்திரம் கிராமத்திற்கு, 25 கி.வோ., திறன் கொண்ட மின்மாற்றி அமைத்து மின் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், குறைந்தழுத்த மின்சாரம் வருகிறது என, தொடர்ந்து மக்கள் புகார் தெரிவித்தனர்.
துணைமின் நிலையத்தில் இருந்து, 100 கி.வோ., கொண்ட புதிய மின்மாற்றி கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் அமைத்து, தற்போது சீரான மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இனிமேல் மழை, காற்று அடித்தாலும், தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.