/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூந்தமல்லியில் 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
/
பூந்தமல்லியில் 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
பூந்தமல்லியில் 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
பூந்தமல்லியில் 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஆக 27, 2025 01:49 AM
திருவள்ளூர்:பூந்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில், வரும் 30ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை, வரும் 30ம் தேதி, பூந்தமல்லி அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளது.
முகாமில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று,  10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளன.
முகாமில், 8, 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் மற்றும் நர்சிங் படித்தவர்கள் பங்கேற்று, பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுவோரின், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்துசெய்யப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

