/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிலாளர்கள் உயிரிழப்பு விவகாரம் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
தொழிலாளர்கள் உயிரிழப்பு விவகாரம் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்கள் உயிரிழப்பு விவகாரம் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்கள் உயிரிழப்பு விவகாரம் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 08, 2025 12:27 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் அருகே புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகளின்போது, ஒன்பது வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாகவும், அது தொடர்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் அடுத்த வாயலுாரில், எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில், இரண்டு அலகுகளில், 1,320 மெகா வாட் மின் உற்பத்திக்காக, அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடக்கின்றன.
அங்கு, நிலக்கரி சேகரித்து வைப்பதற்கும், கையாள்வதற்குமான இரண்டு கிடங்களுக்கான கட்டுமான பணிகளில், பெங்களூரைச் சேர்ந்த 'மெட்டல் கோர்மா' என்ற நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.
கடந்த 30ம் தேதி இரவு, மேற்கண்ட பணிகளுக்காக, 45 மீ., உயரத்தில் நின்று கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள், இரும்பு தளவாடங்கள் சரிந்து விழுந்ததில், ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல், பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர கண்காணிக்காத தொழிற்சாலை இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்ற அனல் மின் நிலையங்களிலும், நிலக்கரி சுரங்கங்களிலும் சேமிப்பு கிடங்குகள் கூரை இல்லாமல் திறந்தவெளியில் அமைந்திருக்கும் நிலையில், இங்கும் தேவையில்லை. இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.