ADDED : நவ 05, 2026 06:59 PM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகைப்பேர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று (நவ.,4) நள்ளிரவு, ஐந்து மணி நேரத்திற்கு மேல் மின் விநியோகம் தடைபட்டது. ஆத்திரமடைந்த மக்கள், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கன்னிகைப்பேரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இரண்டு பக்கமும், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
தகவலறிந்து வந்த பெரியபாளையம் போலீசார் மற்றும் கன்னிகைப்பேர் மின்வாரிய அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
