/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
/
திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : மே 30, 2025 02:19 AM

திருவள்ளூர்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், சாலை விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கிய பள்ளிபட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த மார்ச் 26ம் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த கூடாது என, காவல் துறையினர் தெரிவித்தனர். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், சட்டசபை முன்னாள் உறுப்பினருமான டில்லிபாபுவிற்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் திடீரென்று டில்லிபாபு, சங்க மாவட்ட செயலர் சம்பத் ஆகியோரை கீழே தள்ளியதோடு டில்லிபாபு-வின் கையை பிடித்து இழுத்து சட்டையை கிழித்து இழுத்து சென்றார். மேலும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இத்தாக்குதல் குறித்து தற்போது நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது, காவல் துறை மானியக் கோரிக்கையில், மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டசபை குழு தலைவர் நாகைமாலி காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்ட திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.
மேலும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,க்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து நேற்று திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் எஸ்.கோபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலர் பி.துளசிநாராயணன், மாவட்ட செயலர் ஜி.சம்பத், உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் போராட்டம் தொடரும் என, கோஷமிட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தியதில் கலைந்து சென்றனர்.