/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிப்பர் லாரி மோதி பெண் பலி உடலை எடுக்க விடாமல் மறியல்
/
டிப்பர் லாரி மோதி பெண் பலி உடலை எடுக்க விடாமல் மறியல்
டிப்பர் லாரி மோதி பெண் பலி உடலை எடுக்க விடாமல் மறியல்
டிப்பர் லாரி மோதி பெண் பலி உடலை எடுக்க விடாமல் மறியல்
ADDED : ஆக 06, 2025 02:29 AM
பொன்னேரி:சோழவரம் அடுத்த நத்தம் கிராமத்தில் வசித்தவர் நடராஜன் மனைவி சாந்தி, 55. பண்டிகாவனுார் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை, வழக்கம் போல் வேலை முடிந்து, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். நத்தம் சாலையில் சென்ற போது, தச்சூர் - சித்துார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டிப்பர் லாரி, அவர் மீது மோதியது. இதில், தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, ஓட்டுநர் தப்பினார். தகவல் அறிந்து சென்ற நத்தம் கிராம மக்கள், சாலை பணிக்காக வரும் லாரிகளால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாகக் கூறி, சாந்தியின் உடலை எடுக்கவிடாமல், சாலை மறியல் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த சோழவரம் போலீசார் சமாதானம் செய்ததால், கிராம மக்கள் கலைந்து சென்றனர். இரண்டு மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து குறித்து விசாரித்து, தப்பிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.