/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போட்டி தேர்வுக்கு இலவச பாட தொகுப்பு வழங்கல்
/
போட்டி தேர்வுக்கு இலவச பாட தொகுப்பு வழங்கல்
ADDED : ஜூலை 01, 2025 09:04 PM
திருவள்ளூர்:தமிழக அரசு நடத்தும் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவ - மாணவியருக்கு, இலவச பாடத் தொகுப்பு வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவ - மாணவியருக்கு, 'நிறைந்தது மனம்' திட்டத்தின் கீழ், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் இலவச பாடத்தொகுப்பு வழங்கும் நிகழ்வு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் பிரதாப், பாடத் தொகுப்பை வழங்கி பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், தற்போது குரூப் - 4 தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பு, கடந்த ஏப்ரல் முதல் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் 60க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இத்தேர்வு வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போதைய பாடத்திட்டத்திற்கேற்ப தமிழ் இலவச பாடத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ - மாணவியருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.