/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊட்டச்சத்து வேளாண் திட்டத்தில் விவசாயிக்கு விதைகள் வழங்கல்
/
ஊட்டச்சத்து வேளாண் திட்டத்தில் விவசாயிக்கு விதைகள் வழங்கல்
ஊட்டச்சத்து வேளாண் திட்டத்தில் விவசாயிக்கு விதைகள் வழங்கல்
ஊட்டச்சத்து வேளாண் திட்டத்தில் விவசாயிக்கு விதைகள் வழங்கல்
ADDED : ஜூலை 04, 2025 08:35 PM
திருத்தணி:ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு விதை தொகுப்புகள் வழங்கப்பட்டன.
விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வகையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 'ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்' என்ற புதிய திட்டத்தை, நேற்று தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.
திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட முருக்கம்பட்டு கிராமத்தில், ஊட்டச்சத்து வேளாண்மை திட்டத்தை, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் துவங்கி வைத்தார்.
பின் விவசாயிகளுக்கு, வெண்டை, கத்திரி, கொத்தவரை, தக்காளி உள்ளிட்ட ஆறு வகையான விதைகளை வழங்கினார்.
அதேபோல், பொன்னேரியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில், கலெக்டர் பிரதாப் தலைமையில், விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் விதை தொகுப்புகள் வழங்கப்பட்டன.
பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ், மாநில திட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேதவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதில், விவசாயிகளுக்கு தக்காளி, கத்திரி, வெண்டை, மிளகாய் மற்றும் கீரை வகைகள், பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழ வகைகள் அடங்கிய விதை தொகுப்புகள் வழங்கப்பட்டன.